» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெரியார் பற்றிய வரலாறு தெரியாமல் பேசக்கூடாது: ரஜினிக்கு டிடிவி தினகரன் கண்டனம்

வெள்ளி 24, ஜனவரி 2020 11:17:11 AM (IST)

"தந்தை பெரியாரை பற்றி ரஜினிகாந்த் பேசி இருப்பது கண்டனத்துக்குரியது" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைவர்களின் வரலாறு பற்றி விவரம் அறியாமல் பேசக் கூடாது. தந்தை பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, அவர் ஒரு இயக்கம்.  பெரியார் குறித்து பேசிய ரஜினிகாந்த், அவருடன் இருக்கும் தமிழருவி மணியன் போன்றவர்களுடன் ஆலோசித்து பேசியிருக்கலாம்.

சிறையில் உள்ள சசிகலா, சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு உரிய நேரத்தில் வெளியே வருவார், சசிகலாவை பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்புவது ஏற்புடையதல்ல.  சசிகலாவோ, தாமோ ஒரு போதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை. மேலும், தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை அதிகாரிகள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory