» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெரியார் குறித்த பேச்சு : ரஜினிக்கு எதிரான திராவிடர் விடுதலை கழக வழக்கு வாபஸ்

வெள்ளி 24, ஜனவரி 2020 12:18:35 PM (IST)

தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பியதாக ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

துக்ளக் பத்திரிகை பொன் விழாவில் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியதற்கு  எதிராக அவர் மீது திக சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டன.  சென்னை திருவல்லிக்கேணி மற்றும் கோவை காட்டூர் காவல் நிலையங்களில்  கொடுத்த புகார் மீது வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பெரியார் பற்றி அவதூறான கருத்துக்களை ரஜினிகாந்த் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த மனு ஐகோர்ட்டில் நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்கு முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? என நீதிபதி கேள்வி எழுப்பினார். புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும் என்று நீதிபதி ராஜமாணிக்கம் கூறினார். இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதே தவறு என்று கூறினர். இதனை அடுத்து, மனுக்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory