» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவகாசி அருகே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை - அசாம் வாலிபர் சிக்கினார்!!

வெள்ளி 24, ஜனவரி 2020 12:29:17 PM (IST)

சிவகாசி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதில் அசாம் வாலிபர் சிக்கியது எப்படி? என்ற விவரம் தெரியவந்து உள்ளது.

சிவகாசி அருகே கூலி தொழிலாளி ஒருவரின் 8 வயது மகள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதே பகுதியில் உள்ள சாக்குப்பை தயாரிக்கும் ஆலையில் பணியாற்றி வந்த அசாம் மாநிலம் நல்பேரி மாவட்டத்தை சேர்ந்த அக்பர்அலி மகன் மோஜம் அலி (20) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் 5 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். 

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி பரிமளா முன்பு மோஜம் அலியை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை வாலிபரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அசாமைச் சேர்ந்த மோஜம் அலி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள துணிப்பை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனத்திற்கு அண்மையில் பெயிண்ட் அடிப்பதற்காக சிறுமியின் தந்தை சென்றுள்ளார். அப்போது மோஜம் அலி உள்ளிட்ட அசாம் இளைஞர்களுடன் சிறுமியின் தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் வீட்டுக்கு அசாம் இளைஞர்கள் வந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், சிறுமி காணாமல்போன திங்கட்கிழமை மோஜம் அலி, அரை நாள் விடுப்பில் சென்றதும், இரவு முழுவதும் தங்குமிடத்திற்கு திரும்பாமல், காலை நேரத்தில்தான் வந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மோஜம் அலியிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமி உடல் கிடந்த இடத்திற்கு அழைத்துச்சென்று வாக்குமூலம் பெற்றதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து

அருண்Jan 25, 2020 - 08:48:32 PM | Posted IP 106.2*****

இதுவும் நடக்கும். இன்னமும் நடக்கும். எல்லாம் பானிபூரி காரனுங்கள வேலைக்கு வச்சா இப்படித்தான் ஆகும்

MAKKALJan 24, 2020 - 04:50:40 PM | Posted IP 108.1*****

EANCOUNTERLA PODUNGA

ஒருவன்Jan 24, 2020 - 01:29:40 PM | Posted IP 162.1*****

தமிழ்நாட்டவரை தள்ளிவிட்டு, கூலிக்கு குறைந்த விலைக்கு வடை நாட்டுக்காரனை தமிழ்நாட்டுக்கு அழைத்தவன் எல்லாம் முட்டாள் .. இனி வடை நாட்டவரை (பீஹாரி , பனிபூரிகாரன்,...) கண்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory