» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை - டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

வெள்ளி 24, ஜனவரி 2020 5:10:12 PM (IST)

தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்தது. அவருக்கு எதிராக பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சாலவாக்கம், களியப்பட்டியில் நேற்று இரவு மர்ம கும்பல் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றது. 

இதுதொடர்பாக, சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்லார்.இதுதொடர்பாக, டிஜிபி திரிபாதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

oruvanJan 25, 2020 - 10:51:51 AM | Posted IP 162.1*****

digital banner agatruvathu mathiri thalaivarkal silai agatralame.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory