» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக எம்எல்ஏக்கள் 11பேரை பதவி நீக்கக் கோரிய திமுக மனு விரைவில் விசாரணை: உச்சநீதிமன்றம்

வெள்ளி 24, ஜனவரி 2020 5:37:48 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 11 அதிமுக எம்எல்ஏக்களை பதவி நீக்கக்கோரி திமுக தாக்கல் செய்த மனு குறித்து விரைவில் விசாரணை துவங்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் அதிமுக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு எதிரான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்த 11 அதிமுக எம்எல்ஏக்களை பதவியில் இருந்து நீக்கக்கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு குறித்து விரைவில் விசாரணை துவங்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ .பொப்தே இன்று நீதிமன்றத்தில் அறிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தின் மீது ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினெட்டாம் தேதி முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர்.. அதிமுக கொறடா பிறப்பித்த ஆணைக்கு எதிராக வாக்களித்தவர்கள் கட்சித்தாவல் தடை சட்டத்தை மீறி விட்டனர் எனவும் அவர்களை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சக்கரபாணி சார்பாக பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார்.கட்சியின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்த 11 பேரையும் எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்க வேண்டியது சட்டப்பேரவைத் தலைவரை கடமை. அவர் தனது கடமையை நிறைவேற்றவில்லை . அதனால் நீதிமன்றம் அவர் வழங்கவேண்டிய உத்தரவை பிறப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டது.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சக்கரபாணி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கபில்சிபல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன் இன்று குறிப்பிட்டார் . உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவைத் தலைவர்கள் தங்களிடம் வரும் பதவி நீக்க கோரிக்கைகள் குறித்து 3 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம். கூறியது.

மற்றொரு வழக்கில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து முடிவு செய்யும் உரிமையை சட்டப் பேரவைத் தலைவரிடம் ஒப்படைக்க கூடாது. சுயேச்சையான டிரிப்யுனல் ஒன்றை அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது. இப்படி மாறுபட்ட கருத்துக்கள் வெளியாவதால் வழக்கினை விரைந்து பரிசீலிக்க வேண்டியது அவசியம் என கபில்சிபல் தெரிவித்தார். அவரது கருத்தை அங்கீகரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விரைவில் மனு விசாரணை நாள் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனக் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory