» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜம்மு காஷ்மீர் முழுவதும் 2 ஜி இணைய சேவைகள் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் துவக்கம்

சனி 25, ஜனவரி 2020 5:26:11 PM (IST)ஜம்மு காஷ்மீர் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் 2ஜி மொபைல் இணைய சேவைகள் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிற்ச்ப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட போது மாநிலம் முழுவதும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் மற்றும் இணைய சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் இணையம் மற்றும் மொபைல் சேவைகள் மீண்டும் செயல்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. 

ஆனால் தேசவிரோத சக்திகளால் தவறான செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 10ம் தேதி உச்சநீதிமன்றம், ஜம்மு காஷ்மீரில் இணையம் மற்றும் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தை கடுமையாக சாடியது. மொபைல் மற்றும் இணைய சேவை மக்களின் அடிப்படை உரிமை என தெரிவித்தது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கடந்த 15ம் தேதி முதல் பிரீபெய்ட் மொபைல்களில் குறுஞ்செய்தி மற்றும் பேசும் சேவையை 5 மாவட்டங்களில் மீண்டும் துவங்கியது.

இந்நிலையில் காஷ்மீர் முழுவதும் இன்று இணையதள சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் மொபைல் இணைய சேவை மீண்டும் இன்று முதல் தொடங்கி உள்ளது. ஆனாலும் 2ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது மிகவும் மெதுவாகவே செயல்படும். இணையதள சேவைகளின் மூலம் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட வலைத்தளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory