» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்ஐ., வில்சன் கொலை : சோதனைச்சாவடியில் 2 பயங்கரவாதிகளிடம் விசாரணை

சனி 25, ஜனவரி 2020 6:11:19 PM (IST)

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட களியக்காவிளை சோதனைச்சாவடிக்கு 2 பயங்கரவாதிகளை அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

களியக்காவிளை சோதனைச்சாவடியில் காவல் பணியில் இருந்த சப்-இன்ஸ் பெக்டர் வில்சன் கடந்த 8-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.வில்சனை சுட்டுக் கொன்றதாக அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். 

பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய இருவரையும் போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மார்க்கெட் ரோடு சோதனை சாவடிக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். 

இதற்காக களியக்காவிளை சோதனை சாவடி முன்பு இன்று காலை முதலே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இதனிடையே அப்துல் சமீம், தவுபீக் இருவரிடமும் இருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதங்களில் குறிப்பிடப்பட்ட ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தமிழக தலைவராக காஜா மொய்தீனும், கர்நாடகா தலைவராக மெகபூப் பாஷாவும் இருக்கலாம் என்று கருதும் போலீசார் இது தொடர்பாக அவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே தவுபீக்கின் மனைவி மற்றும் உறவினர்கள் திருவனந்தபுரம், விதுரா பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். அந்த மையத்திற்கு தவுபீக் அடிக்கடி சென்று வந்துள்ளார்.இதை அறிந்த போலீசார் அங்கு சென்றும் சோதனை நடத்தினர். அங்கிருந்து சில ஹார்டுடிஸ்க்குகளையும் கைப்பற்றினர். அவற்றை போலீசாரின் சைபர் கிரைம் பிரிவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இதிலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory