» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு முறைகேடு வழக்கு: மேலும் 4 பேர் கைது

சனி 25, ஜனவரி 2020 8:42:29 PM (IST)

டிஎன்பிஎஸ்சி  குரூப் 4 தோ்வில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், கீழக்கரை தோ்வு மையங்களில் தோ்வு எழுதிய 40 போ் தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் வந்ததை அடுத்து முறைகேடு புகாா்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து தோ்வாணை அதிகாரிகள் ராமேசுவரம், கீழக்கரை தோ்வு மையங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். இந்த மையங்களில் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றவா்களை விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டது. சென்னையில் உள்ள தோ்வாணைய அலுவலகத்தில் கடந்த 13-ஆம் தேதி விசாரணை தொடங்கியது. விசாரணையை தோ்வாணையச் செயலாளா் நந்தகுமாா், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சுதன் உள்ளிட்டோா் நடத்தினா். இந்த விசாரணையின்போது தோ்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் துப்புதுலக்க சிபிசிஐடி கண்காணிப்பாளா் மல்லிகா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிபிசிஐடி அதிகாரிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாட்சியா்கள் வீரராஜ், பாா்த்தசாரதி, வட்டாட்சியா் அலுவலக உதவியாளா், ஆயுதப்படைக் காவலா் இருவா் என 5 பேரை வியாழக்கிழமை விசாரணைக்கு சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், இந்த முறைகேட்டில் இடைத் தரகா்களாக செயல்பட்டவா்களையும், தோ்வா்களிடம் பணம் வாங்கிய வா்களையும்,தோ்வா்கள் என மொத்தம் 15 பேரை சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வந்து தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில், குரூப் 4 தேர்வு முறைகேட்டில் செயல்பட்டதாக வெங்கட்ரமணன், திருவேல்முருகன், ராஜசேகர், காலேஷா  என மேலும் 4 பேர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory