» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டிலிருந்து பத்ம விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

ஞாயிறு 26, ஜனவரி 2020 4:16:21 PM (IST)

தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் மிக உயரிய பத்ம விருதுகள் பெறுவோருக்கு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசன் அவர்களின் சிறந்த தொழில் மற்றும் வர்த்தக செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவித்த செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் சிறந்த சமூக சேவையினை அங்கீகரித்து அவருக்கும் மத்திய அரசு உயரிய விருதான  பத்ம பூஷன் விருது  அறிவித்துள்ளது.

கலைத்துறையில் சிறந்து விளங்கும்  கர்நாடக இசைப் பாடகர்கள் திருமதி லலிதா மற்றும் திருமதி சரோஜா சிதம்பரம் ஆகியோருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, சென்னை ஆகிய பெரும் நகரங்களின் வரலாற்று, சமூக மற்றும் கலாச்சார அடையாளங்களின் ஓவியங்களை சிறப்புற தீட்டும் மனோகர் தேவதாஸ்  அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின்  சமூக சேவையினை பாராட்டி அவருக்கு மத்திய அரசு  பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாதஸ்வர இசையால் அனைவரின் உள்ளங்களை கவர்ந்து வரும் திருமதி காலீ ஷாபி மெகபூப் மற்றும் திரு. ஷேக் மெகபூப் சுபானி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் பிரதீப் தலப்பில் அவர்கள், விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பத்ம பூஷன் விருதினை பெறும்  வேணு சீனிவாசன் மற்றும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்; பத்மஸ்ரீ விருதினை பெறும் லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ்,   எஸ். ராமகிருஷ்ணன், காலீ ஷாபி மெகபூப், ஷேக் மெகபூப் சுபானி மற்றும் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் மேன்மேலும் பல விருதுகளை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory