» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

வியாழன் 13, பிப்ரவரி 2020 5:15:27 PM (IST)

தமிழ்நாட்டில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுவை அமைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில், வீட்டிற்கு நேரடியாக ரத்தப் பரிசோதனை செய்ய யாரேனும் வந்தால் அவர்கள் எச்ஐவி நோயை பரப்புபவர்கள் என ஒரு வதந்தி பரவியது. சென்னை காவல் துறையின் லோகோவை பயன்படுத்தி வடமாநில கடத்தல் கும்பல், குழந்தைகளை கடத்துவதாக செய்திகள் பரவின. இது போன்ற வதந்திகள் தொடர்பாக விசாரணை நடத்தி, வதந்திகள் உண்மையா என்பதை ஆய்வு செய்து வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வதந்தி செய்திகளைத் தடுக்கும் வகையில் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர். வதந்தியாக பரப்பப்படும் செய்திகளை கண்காணித்து அதை பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் சென்னை பெருநகர காவல்துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

மக்கள்Feb 14, 2020 - 03:35:40 PM | Posted IP 108.1*****

அதே மாதிரி குடியுரிமை சட்டம் பற்றி என்னவென்று தெரியாமலேயே தவறான கருத்துக்களை கூறி வரும் கட்சி தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாமே .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory