» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வி.ஏ.ஓ.க்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

வெள்ளி 14, பிப்ரவரி 2020 1:24:27 PM (IST)

பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார். அதில்பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிவிப்பும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ)-களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓக்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory