» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மு.க.ஸ்டாலின் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவில்லை : பொன்னார் விமர்சனம்

வெள்ளி 14, பிப்ரவரி 2020 8:31:11 PM (IST)

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவில்லை  முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் தெரிவித்தார். 

கோயமுத்தூரில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும், 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாஜக சார்பில் இன்று மாலை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இந்த பேரணியில் அக்கட்சியின்  மாநிலபொது செயலாளர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில செயலாளர்  ராகவன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா  சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பேரணியின்  முடிவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது, 

பயங்கரவாதிகளுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது எனவும், அப்படி கொடுத்தால் கொலையில் முடியும்  இதற்கு உதாரணம் வில்சன் கொலை சம்பவம். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சி.ஏ.ஏ போராட்டத்தை அரசியல் கட்சியினர் தூண்டுகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு பல இடங்களில் ஆதரவில்லை என தெரிவித்தார். 2 கோடி கையெழுத்து என்பதை யாரும் நம்ப மாட்டார்கள் . இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory