» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை ஆசிரியர்கள் சோதனை செய்ய தடை: அரசுத் தேர்வுத்துறை

வெள்ளி 21, பிப்ரவரி 2020 5:26:42 PM (IST)

பத்து, பிளஸ் 1, பிளஸ 2 பொதுத் தேர்வின் போது ஆண் ஆசிரியர்கள் மாணவிகளை சோதனை செய்ய தடை விதித்து அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.  இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெறுகின்றன.  இந்தநிலையில்  பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும் படையில் நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் சோதனை செய்யக் கூடாது என்றும் பெண் ஆசிரியர்களை கொண்டு தான் சோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,  அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கக்கூடிய தேர்வு மையங்களை பறக்கும்படை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory