» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது; ம.நீ.ம. 3-வது ஆண்டு துவக்கம்: கமல் வாழ்த்து

வெள்ளி 21, பிப்ரவரி 2020 5:48:14 PM (IST)

இதுவரை என்ன செய்தோம் என்று கேட்போர் பாராட்ட நாம் சில செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3ம் ஆண்டு துவக்கம் குறித்து கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தன் அறிக்கையில்,  அன்பு கொண்டோர் அனைவருக்கும் வணக்கம். 20.02.2020 இன்று நாம் அனைவரும் மூன்றாம் ஆண்டின் துவக்கத்தில் நிற்கின்றோம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்சி ஆரம்பித்தப்பொழுதில் இருந்த அதே எழுச்சியோடும் வேகத்தோடும் நாம் இன்றும் களம் காண்கிறோம். இதற்கு முதல் காரணம், நாம் களம் கண்ட முதல் தேர்தலில் 17 லட்சம் வாக்குகள் அளித்து நம்மீது அவ நம்பிக்கை கொண்டோரையும் ஆச்சரியத்தில் இமை உயர்த்த வைத்தது நம் மக்களே.

நம் மனதிற்கு உரமேற்றிய அவர்களுக்கு நன்றி சொல்லும் தருணமிது. அரசியலை வெகுதூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு நான் கட்சி ஆரம்பித்தவுடன் கொஞ்சமும் தயங்காமல் என்னோடு கைகோர்த்து கட்சி வளர்க்கும் நம் நிர்வாகிகளும் செயல் வீரர்களும் அனைவரும் கரம் குலுக்கி பாராட்ட வேண்டியவர்களே. என் கனிவோடு என் கண்டிப்பையும் பொறுத்து கடந்த 38 ஆண்டுகளாக என் நிழலிலும், எனக்கு நிழலாகவும் இருக்கும், என் காலம் கடந்த பின்னும் எனக்கு அடையாளமாக இருக்கப்போகும் நற்பணி இயக்கத்தை கட்டிக்காத்துவரும் என் தோழர்களை நன்றியுடன் நினைக்கிறேன்.

இதுவரை என்ன செய்தோம் என்று கேட்போர் பாராட்ட நாம் சில செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. அதற்கான பரீட்சை வெகு அருகில். "ஓய்வு மட்டுமல்லாமல் யோசிக்கவும் நம்மிடம் நேரமில்லை” அடுத்து வரும் நாட்களெல்லாம் "செயல்”, "செயல்” மட்டுமே..... இன்று தொடங்குவோம் அதற்கான பணிகளை! 2021ல் வென்று தொடங்குவோம் மக்கள் பணிகளை. வாழ்த்துக்களோடும், நன்றிகளோடும், நம்பிக்கையோடும்.. நாளை நமதே என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றினார். மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர்கள்  (வடக்கு & கிழக்கு) மற்றும் (தெற்கு&மேற்கு),திருச்சி மண்டல மாநில செயலாளர் (கட்டமைப்பு),செய்தி மற்றும் ஊடகப் பிரிவு மாநில செயலாளர் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

உண்மைFeb 23, 2020 - 06:07:05 PM | Posted IP 162.1*****

என்ன பணி?? சினிமா சூட்டிங்கா ??? கூத்தாடிகள் வேலை எல்லாம் சினிமா பக்கம் தான் , பணத்துக்காக மட்டும் அரசியல் பக்கம்..

PSCCFeb 22, 2020 - 03:16:46 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் வெல்க உம் பணி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory