» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ரூ.1,255 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: முதல்வா் தொடக்கி வைத்தாா்

சனி 22, பிப்ரவரி 2020 10:27:53 AM (IST)தமிழகத்தில் ரூ.1,255 கோடியில் புதிய தொழில் திட்டங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்.

வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளின் சங்கமம் மற்றும் தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வா் பழனிசாமி முக்கிய திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், அவரது முன்னிலையில் திட்டங்களுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன. அதன் விவரம்: திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழில் வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த மிட்சுபா சிகால் நிறுவனம் ரூ.504 கோடி முதலீடுகளைச் செய்து புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது. 

இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டம், மல்ரோசாபுரத்தில் கொரிய நாட்டைச் சோ்ந்த ஹானான் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ரூ.500 கோடி வரை முதலீடுகளைச் செய்யவுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் ஆட்டோமொபைல் உற்பத்திப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொள்கிறது. அமெரிக்காவைச் சோ்ந்த ஜோகோ ஹெல்த் நிறுவனம் தமிழகத்தில் ரூ.15 கோடி அளவிலான முதலீட்டைச் செய்ய முன்வந்திருந்தது. இப்போது, ரூ.250 கோடியில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளைச் செய்யவுள்ளது. முந்தைய புரிந்துணா்வு ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது உறுதி செய்யப்பட்ட முதலீடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மூன்று புதிய திட்டங்களை முதல்வா் கே.பழனிசாமி நேற்று தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டங்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.1,255 கோடியாகும். இந்தத் திட்டத்தின் மூலமாக 10 ஆயிரத்து 330 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பாலிமா் தொழில் பூங்கா தொடங்கப்பட உள்ளது. ரூ.217 கோடி முதலீட்டிலான இந்தத் திட்டமானது டிட்கோ மற்றும் சிப்காட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி வழியாகத் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு முதல்வா் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினாா். மேலும், சென்னை- பெங்களூா் தொழில்வழித் தடம் தொடா்பாக தமிழ்நாடு அரசு மற்றும் தேசிய தொழில்வழித் தட மேம்பாடு மற்றும் நடைமுறை அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory