» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கால அவகாசம் கோரி நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு

சனி 22, பிப்ரவரி 2020 12:41:14 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் நேரில் விளக்கம் அளிப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் கால அவகாசம் கோரியுள்ளார். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 13 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தக் கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு தரப்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார்.

இந்த விசாரணையில் ஆஜராக பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டம் குறித்து சென்னை விமான நிலையத்தில் கருத்து தெரிவித்த ரஜினிகாந்தை நேரில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி ஒரு நபர் ஆணையத்தில் வரும் 25ஆம் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனக்கு தற்போது படப்பிடிப்பு வேலைகள் இருப்பதால் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே இதிலிருந்து விலக்கு அளிக்கும்படி அவரது வழக்கறிஞர் மூலம்  நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு மனு அனுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைFeb 23, 2020 - 06:04:01 PM | Posted IP 162.1*****

அது இருக்கட்டும் . முதல்ல சுட்டவங்கள பிடிக்க துப்பில்லை.. துப்பாக்கியால் சுட்ட போலீஸ் கு ஒழுங்கா சமூக விரோதி மேல சுட்டாரா? அப்பாவி மக்கள் மீது சும்மா சுட்டாரா ?? விசாரணை எல்லாம் வேஸ்ட் .. ஆண்டவர் தான் பார்க்கணும் ...

PSCCFeb 22, 2020 - 03:09:09 PM | Posted IP 108.1*****

WELCOME

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory