» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா வைரஸ் தொடர்பாக போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்: டி.ஜி.பி. சுற்றறிக்கை

செவ்வாய் 24, மார்ச் 2020 8:33:24 AM (IST)

கரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையின் விவரம் வருமாறு: கரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவாமல் இருக்க அனைவரும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். குறிப்பாக கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.

தமிழக முதல்-அமைச்சர், கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை உத்தரவாக வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழக போலீஸ் துறையில் உள்ள அனைத்து பிரிவினரும் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் கைகளை சுத்திகரிப்பான் மூலம் சுத்தம் செய்து, ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகுதான் அவர்களை காவல் நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

* காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களை காற்றோட்டமான அறைக்குள் மட்டும் அனுமதிக்க வேண்டும். முழுவதுமாக மூடப்பட்ட ‘ஏர் கண்டிசன்’ அறைக்குள் அனுமதிக்க கூடாது.

* காவல் நிலையங்களுக்கிடையே தகவல் பரிமாற்றங்களை ‘ஆன்-லைன்’ வழியாக மட்டுமே நடத்த வேண்டும். தபால் போன்றவற்றை அலுவலக வாசலிலேயே வாங்கிக்கொள்ள வேண்டும். காவல் நிலையங்களில் தேவையின்றி ஆலோசனை கூட்டம் நடத்தக்கூடாது.

* உடற்பயிற்சி கூடங்கள், சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை மூட வேண்டும். போலீஸ் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களும் மாவட்ட மருத்துவமனை அதிகாரிகளுக்கு கரோனா வைரஸ் தடுப்பது தொடர்பாக முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory