» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

செவ்வாய் 24, மார்ச் 2020 11:37:46 AM (IST)

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கரோனா பாதிப்பு காரணமாக, சட்டப் பேரவை கூட்டத் தொடா் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.3,250 கோடி நிவாரண நிதி அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும். ரேசன் கடைகளில் கூடடம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும். 

மார்ச் மாத ரேசன் பொருட்களை பெற தவறியவர்கள் அவற்றை ஏப்ரல் மாத பொருட்களுடன் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். கட்டட தொழிலாளர்களுக்கு ஓட்டுநர் தொழில் சார்ந்தவர்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.1000 வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு 2 நாட்கள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும். அம்மா உணவகங்களில் சுகாதாரமான உணவுகள் சமைத்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory