» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் கரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

செவ்வாய் 24, மார்ச் 2020 3:49:46 PM (IST)

தமிழகத்தில் கரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருவதாக சட்டமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா உட்படப் பல நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

இன்று சட்டமன்றத்தில் கரோனா தொடர்பாகப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் மின்னல் வேகத்தில் இந்த வைரஸ் பரவி வருவதாகத் தெரிவித்துள்ளார். "கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும். வீட்டில் இருப்பதை விடுமுறையாகக் கருதி வெளியில் செல்லக் கூடாது. இந்த வைரஸ் தொற்று உலக நாடுகளில் 332,970 பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தின் பதற்றத்தை தமிழக அரசு உணர்ந்ததால் தான் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவே கரோனா அச்சத்தில் உறைந்திருக்கிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்று வரும் நபர் கவலைக்கிடமாக இருக்கிறார். அவருக்கு உடல்நிலையில் வேறு சில பாதிப்புகளும் இருந்ததால் அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory