» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் கரோனாவால் உயிரிழப்பு 2-ஆக உயர்வு!

சனி 4, ஏப்ரல் 2020 4:47:40 PM (IST)

விழுப்புரத்தில் இன்று கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் உயிரிழப்பு  2 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி மாநாட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய 9 பேருக்கு கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார். அவர் விழுப்புரம் வண்டிமேடு சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்தவர். வ.பகண்டை கூட்டு ரோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கரோனா வைரஸ் பாதிப்புக்கு தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory