» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நோய்த் தொற்றுக்கு மதச்சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும்: முதல்வர் பழனிச்சாமி

சனி 4, ஏப்ரல் 2020 5:42:08 PM (IST)

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்புக்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கரோனா பெருந்தொற்றினால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுநோய் சமூகப் பரவலாக மாறுவதை தடுக்கும் பொருட்டு, சமூக விலகல் கடைபிடிக்கப்படுகிறது. இத்தருணத்தில் பெருந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அரசின் முயற்சிகளோடு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

எனவே, பல்வேறு சமய தலைவர்கள்  மற்றும் அவர்கள் சார்ந்த  இயக்கங்களின் ஒருமித்த ஆதரவினைக் கோர முடிவு செய்யப்பட்டு, எனது உத்தரவின்பேரில் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், சமய தலைவர்களுடனான கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாநில அளவிலும்  அரசு சார்பில் தலைமைச் செயலாளர் தலைமையில் 03.04.2020 அன்று கிருத்துவ, இஸ்லாமிய, இந்து, ஜெயின் மற்றும் சீக்கிய மதத் தலைவர்களுடன் தனித்தனியே கூட்டம் நடத்தப்பட்டது.
 
இக்கூட்டத்தில் பல்வேறு மதத் தலைவர்களும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி, கரோனா தொற்றுநோய் தடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தார்கள். அவர்கள் எடுத்துரைத்த கருத்துகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.நோய் தொற்று பொது மக்களுக்கு பரவுவதை தவிர்க்க, பொது மக்கள் எதிர்நோக்கும் பண்டிகைகள் காலத்தில், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கரோனா தொற்று நோய் ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்ககூடியதென்றும், இதற்கு மதச்சாயம் பூசுவதை  அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் மக்கள் வெறுப்புணர்வுடன் பார்ப்பதை தவிர்த்து, இதுபோன்ற தொற்று நோய் அனைவருக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து அத்தகையவர்களை அனைவரும் அன்போடும், பரிவோடும் நடத்தவேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தனியார் மருத்துவமனைகள், நோய்தொற்று உள்ளவர்களை பாரபட்சமின்றி, பரிவோடும்  அன்போடும் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும், சில நோய் தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால், இதற்காக அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது.அரசு தயாரித்துள்ள பல்வேறு பிரச்சார பிரதிகள் மற்றும் கையேடுகளை சமய அமைப்புகளுக்கு வழங்கவும் அதை அவர்கள் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் உட்பட பல முடிவுகள் எடுக்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory