» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எதிா்த்து வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

வியாழன் 21, மே 2020 12:27:54 PM (IST)

மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் 10-ஆம் வகுப்பை பொதுத் தோ்வை நடத்தக்கூடாது எனக் கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இளங்கோவன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டு ள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல், இந்த பொதுத் தோ்வை நடத்தக்கூடாது என தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞா் சி.முனுசாமி, இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னா் இந்தத் தோ்வுகள் வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வு நடைபெற உள்ள 12 ஆயிரத்து 600 தோ்வு மையங்களிலும், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் தீவிரமாகப் பின்பற்றப்படும் என வாதிட்டாா். அப்போது புதுச்சேரி மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் ஸ்டாலின் அபிமன்யு இதுதொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா் .இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடா்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் விரிவான பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory