» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரையில் இருந்து 61 நாள்களுக்கு பிறகு விமான சேவைகள் தொடங்கியது

திங்கள் 25, மே 2020 11:38:15 AM (IST)

மதுரை விமானநிலையத்தில் இருந்து  61 நாள்களுக்கு பிறகு 12 விமான சேவைகள் தொடங்கியது 

கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் மத்திய  மாநில  அரசுகள் கடந்த  மார்ச் மாதம் முதல் மே 31-ஆம் தேதி வரை நான்கு கட்டமாக பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்ததன்பேரில் செவ்வாய்க்கிழமை முதல் மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், டெல்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவைகள் தொடங்கியுள்ளது.

விமான டிக்கெட் விற்பனை அனைத்தும் கடந்த ஒரு வார காலமாக இணையதளம் மூலமாகவே நடைபெற்று வருகிறது. மதுரை விமான நிலையம் வரும் பயணிகள் அனைவரின் பொருள்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பயணிகள் கை கழுவுவதற்காக தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காலணிகள் மூலம் கிருமி பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட தரை விரிப்பில் காலணிகள் சுத்தம் செய்து, பயணிகள் அனைவருக்கும் தர்மல் ஸ்கேனிங் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது .மேலும் பயணிகளுக்கு கையுறைகள் வழங்கப்பட்ட பின்பு மதுரை விமான நிலையத்தினுள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முழு பாதுகாப்புடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . பயணிகளின் வருகையை பொறுத்து விமானங்கள் அதிக அளவு இயக்கப்படும் என்று விமான நிலையங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள விமான சேவைகள் மே 25 முதல் மே 30-ஆம் தேதி வரை எந்த ஒரு மாற்றம் இல்லை என்றும் மே 31ம் தேதிக்கு பிறகு விமானங்கள் அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்திற்குள்  மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்த்து எந்த ஒரு கடைகளும் திறப்பதற்கான அனுமதி அளிக்கப்படவில்லை. மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதல் 12 விமான சேவைகள் தொடக்கம்.

இண்டிகோ விமான சேவை

* சென்னையிலிருந்து காலை 7.05 மணிக்கு மதுரை வந்து மீண்டும் 7.35 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்கிறது.

* மீண்டும் காலை 8.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து 9.00 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்கிறது.

* மதியம் பெங்களூரில் இருந்து 12.25 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து 1.00 பெங்களூர் நிலையம் செல்கிறது.

ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள்

* காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த மீண்டும் 12 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்கிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சேவை

* மதியம் 1.30 மணிக்கு டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்து மீண்டும் 2.45 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் செல்கிறது.

* மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து 5.50 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது 6.40 மணிக்கு டெல்லி விமான நிலையம் செல்கிறது.

மேலும் இந்த விமான சேவைகள் மே 25ம் தேதியிலிருந்து மே 30-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதிக்கு பின்னர் கூடுதல் விமான சேவைகள் இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory