» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊரடங்கு எதிரொலி : தமிழ்நாடு-கேரளா எல்லையில் நடைபெற்ற கல்யாணம்

திங்கள் 25, மே 2020 7:18:48 PM (IST)

தமிழக கேரள எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமணத்திற்கு பின் மணமகள் லோயா்கேம்ப்பில் உள்ளதனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்ட டார்கள்.

தேனி மாவட்டம் கம்பம்.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் ரத்தினம் மகன் பிரசாத் இவர்ஜே.சி.பி.ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும்கேரள மாநிலம் கோட்டயம் காரப்புழா பகுதியைச்சோ்ந்த கணேசன்மகள் காயத்திரி என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வண்டிப்பெரியாா் மாரியம்மன் கோவிலில் முறையாக திருமணம் நடைபெறுவதாக இருந்தது.கரோனா தொற்று காரணமாக இருவருக்கும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.

இதற்கிடையில் மணமகன் பிரசாத் மற்றும் குடும்பத்தினா் தமிழக கேரள எல்லை குமுளிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு செல்ல அனுமதியில்லாததால், மணமகள் குடும்பத்தினா் வண்டிப்பெரியாரில் இருந்து குமுளிக்கு வந்தனா். குமுளி காவல் நிலைய ஆய்வாளா் ஜெயப்பிகாஷ் ஆலோசனைப்படி, குமுளி கேரள மாநில சுங்கத்துறை சோதனைச்சாவடி வளாகத்தில் திருமணம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

இது பற்றி குமுளி காவல் ஆய்வாளா், இடுக்கி மாவட்ட ஆட்சியா் தினேசுக்கு தகவல் தெரிவித்து, தேனி மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவித்தார்கள் பின்னா் மணமக்கள் குமுளியிலிருந்து, லோயா்கேம்ப் வந்தனா். அங்கு மணமகள் காயத்ரிக்கு பரிசோதனை நடைபெற்றது அதன் பின்பு காயத்ரி தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டாா். மணமகன் உள்பட மற்றவா்கள் கம்பம்.புதுப்பட்டிக்கு திரும்பினா்.இது பற்றி தமிழக அதிகாரி ஒருவா் கூறியது, மணப்பெண்ணுக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டு, முடிவுகள் வந்தவுடன், மணமகன் வீட்டுக்கு மணமகள் காயத்ரியைஅனுப்பி வைக்கப்படுவாா் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory