» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மே 31 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

செவ்வாய் 26, மே 2020 12:24:43 PM (IST)

மே 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வருகிற மே 31 ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory