» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

செவ்வாய் 26, மே 2020 5:17:45 PM (IST)

நாகர்கோவிலில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் பழகி, வீடியோ எடுத்ததுடன், அதை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பின்னர் குண்டர் சட்டம் அவர் மீது பாய்ந்தது.பெண்களை ஏமாற்றி பாலியல் மோசடி செய்ததாக 4 வழக்குகள், போஸ்கோ வழக்கு, கந்துவட்டி வழக்கு என 6 வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதையடுத்து முதற்கட்டமாக நாகர்கோவில் கூடுதல் மகளிர் விரைவு குற்றவியல் நீதிமன்றத்தில் 3 நாட்கள் காசியிடம்  விசாரணை நடத்தினர். 2 ம் கட்டமாக 6 நாட்கள் காசியை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில், அரசியல் பிரமுகர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த விஐபிக்கள் பின்னணியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ஆமாமே 26, 2020 - 10:15:20 PM | Posted IP 108.1*****

பொள்ளாச்சி வழக்குகளில் சரியாக தண்டனை குடுக்க துப்பில்லை அதுல சிபிசி ஐ டி யாம் ...முதல்ல பொள்ளாச்சி குற்றவாளிக்குக்கும் , இந்த காசிக்கும் ஆந்திர போலீஸ்க்கு மாற்றிவிடுங்கள் சரியாகி விடும் . இனிமேல் எந்த குற்றவாளிகளும் உருவாக்கமாட்டான் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory