» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மீன்பிடி தடைக்காலம், மீறுவோர் மீது நடவடிக்கை : கன்னியாகுமரி ஆட்சியர் எச்சரிக்கை

செவ்வாய் 26, மே 2020 6:43:08 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில், மீன்பிடி தடைக்காலம் - மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகளில் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.  இந்த மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் தமிழக கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் இரண்டு பருவங்களாக 61 நாட்கள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா நோய்தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அந்தமான் நிக்கோபரை உள்ளடக்கிய கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலும், லட்சத்தீவை உள்ளடக்கிய மேற்கு கடற்கரை பகுதிகளில் ஜுன் 15 முதல் ஜுலை 31ம் தேதி வரையிலுமான 47 நாட்களுடன் மீன்பிடி தடைக்காலத்தை நிறைவு செய்திட மத்திய மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது.  மேலும் இந்த உத்தரவு இந்த ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த விசைப்படகுகள், இழுவலைப்படகுகள் மேற்கூறிய காலங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும், இத்தடையை மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால் படகு உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory