» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜூன் மாத ரேசன் பொருள்களுக்கு மே 29-ல் டோக்கன் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

புதன் 27, மே 2020 10:09:43 AM (IST)

ஜூன் மாதத்திற்கு தேவையான ரேசன் பொருள்களுக்கு மே 29 ஆம் தேதி அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலையின்றி ரேசன் கடைகளில் வழங்கப்படும். 

ஜூன் 1 ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். அதாவது அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் போன்றவற்றை விலையின்றி பெற்றுக்கொள்ளலாம். இதற்கான டோக்கன் வரும் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory