» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகள் திறக்க அனுமதி: தமிழக அரசு

வியாழன் 28, மே 2020 4:49:11 PM (IST)

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு கூறி உள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று குறையக் குறைய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் கடந்த 19ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், முடிதிருத்துவோரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக் கோரி முடி திருத்துவேர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. 

இவ்வழக்கில் தமிழக அரசு மே 28ம் தேதி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்பவே சலூன் கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 8ஆம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory