» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கரோனா தொற்று : பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டியது

வெள்ளி 29, மே 2020 6:13:01 PM (IST)

தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் அடங்கிய தகவலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது . இதன்படி, தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 733. பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 141.

சென்னையில் மட்டும் இன்று உறுதி செய்யப்பட்டோர் 618. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.இன்றைய தேதியில் மொத்தம் 8,776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்று 11,334 மாதிரிகள் உள்பட இதுவரை 4,66,550 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுவரை 4,45,194 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory