» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேதா இல்லத்துக்கு நாங்கள் வர கூடாது என யாருக்கோ அவசியம் உள்ளது : ஜெ. தீபா பேச்சு

வெள்ளி 29, மே 2020 6:20:16 PM (IST)

வேதா இல்லத்துக்கு நாங்கள் வரக் கூடாது என்பதில் யாருக்கோ அவசியம் இருக்கிறது என்று ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர், ஜெயலலிதாவின்  நேரடி வாரிசுகள் என்று தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை அடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தீபா கூறியதாவது, நீதிமன்றம் இன்று பிறப்பித்த தீர்ப்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை. நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நான் வேதா இல்லத்துக்குச் செல்ல மாட்டேன்.

தமிழக அரசு எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறது. வேதா இல்லத்துக்கு நாங்கள் வரக் கூடாது என்பதில் யாருக்கோ அவசியம் இருக்கிறது. எங்களுக்கு முழு அதிகாரத்தையும் உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பதை நான் மனதார வரவேற்கிறேன். நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் தலைவணங்கி ஏற்க வேண்டும். தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், எங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீபா கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory