» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது - முதல்வ‌ர் பழனிசாமி

வெள்ளி 29, மே 2020 8:55:07 PM (IST)

மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக் கூடாது என தமிழக முதல்வ‌ர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

4 ஆம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டர். மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில், வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கியிருந்து பணி செய்ய விரும்பினால் அனுமதிக்க வேண்டும். கட்டுமானப் பணிகள் எவ்வித தடையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். 

சென்னையில் கரோனா கட்டுக்குள் கொண்டு வர மக்கள் ஒத்துழைப்பு தேவை. அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும். கரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது. தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி தொழிலாளர்கள் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory