» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமணமான மறுநாளே வனிதா விஜயகுமாருக்கு சிக்கல்: கணவரின் முதல் மனைவி போலீசில் புகார்!

ஞாயிறு 28, ஜூன் 2020 9:14:33 PM (IST)

கணவர் பீட்டரின் முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளதால், திருமணமான மறுநாளே வனிதா விஜயகுமாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார், கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகப் புகழை அடைந்தார். நடிகர் ஆகாஷை முதலில் திருமணம் செய்த வனிதா, 2007-ல் அவரை விவாகரத்து செய்தார். ஆனந்த் ராஜனை 2007-ல் திருமணம் செய்தார் வனிதா. பிறகு 2012-ல் ஆனந்த் ராஜனையும் வனிதா விவாகரத்து செய்தார். வனிதாவுக்கு விஜய ஸ்ரீஹரி என்கிற மகனும் ஜோவிதா, ஜெய்நிதா என்கிற இரு மகள்களும் உள்ளார்கள். மகன் ஸ்ரீஹரி ஆகாஷுடனும் இரு மகள்கள் வனிதாவுடனும் வசித்து வருகிறார்கள். 

இந்நிலையில் பீட்டர் பால் என்கிற விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை சனிக்கிழமையன்று திருமணம் செய்துள்ளார் வனிதா விஜயகுமார். சென்னை போரூரில் உள்ள வனிதாவின் இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி இத்திருமணம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்துகொண்ட திருமணத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. இந்நிலையில் கணவர் பீட்டரின் முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளதால், திருமணமான மறுநாளே வனிதா விஜயகுமாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன். இவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல், அவர் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளதாகவும், முறையாக விவாகரத்து அளித்த பின்னரே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் தான் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory