» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஜூலை 31 ம் தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிப்பு : அரசு அறிவிப்பு

திங்கள் 29, ஜூன் 2020 8:27:40 PM (IST)

தமிழகத்தில் வரும் ஜூலை 31 வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடை உள்ள நிலையில் பொது ஊரடங்கினை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) காலை ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று இரவு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் மதுரை மாவட்டத்தில் முழுப் பொது முடக்கம் தொடரும். ஞாயிற்று கிழமை எந்த தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமலில் இருக்கும். பள்ளி,கல்லுாரிகள், வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஹோட்டல்கள்,. ஜவுளி கடைகள், ஆகியவற்றில் சமூக இடைவெளியை பின்பற்றி 50 சதவித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory