» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசியின் தந்தை கைது : தடயங்களை அழித்ததாக குற்றச்சாட்டு

செவ்வாய் 30, ஜூன் 2020 5:48:45 PM (IST)

பெண்கள் பலரை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெண் டாக்டர் உள்பட பல இளம்பெண்களுடன் பழகி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் காசி, அவருடைய நண்பர்கள் டேசன் ஜினோ மற்றும் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். காசி மீதான கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கந்துவட்டி வழக்கில் வங்கி கடனில் இருந்த மோட்டார் பைக் ஆவணங்கள் கடன் செலுத்தி முடிவதற்குள் எப்படி காசி பெயருக்கு மாற்றப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. வங்கி அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உதவி இன்றி ஆவணங்களை மாற்றியிருக்க முடியாது என்பதால் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பெண்கள் பலரை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட காசியின் தந்தை தங்க பாண்டியனிடம்  சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory