» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் : அமைச்சர் செங்கோட்டையன்

புதன் 1, ஜூலை 2020 12:09:07 PM (IST)

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். இது குறித்து கோபிச்செட்டிப்பாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,  12-ம் வகுப்பு தேர்வு முடிவை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. 

முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசனை நடத்திய பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

TuticorianJul 1, 2020 - 06:56:49 PM | Posted IP 157.5*****

I appreciate this. Safety of children is much more important than anything else.

M.sundaramJul 1, 2020 - 03:00:48 PM | Posted IP 108.1*****

But Tasmac shops can be allowed to operate upto 0800 hrs PM. so that corona can be curtailed.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory