» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை : அரசாணை வெளியீடு

புதன் 8, ஜூலை 2020 4:33:43 PM (IST)

சாத்தான்குளம் சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காவல் பணியில் போலீசாருக்கு உதவியாக, சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, ஊர்க்காவல் படை, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆகியோரை பயன்படுத்துவது வழக்கம். முதல் மூன்றும் காவல்துறையுடன் சம்பந்தப்பட்டவை. ஆனால் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அனுமதியின்றி போலீஸுக்கு உதவியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை உலுக்கிய தூத்துக்குடி சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் லாக்கப் மரண வழக்கில் அவர்களை போலீசாருடன் தாக்கியதாக ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது புகார் எழுந்தது. 

மேலும் மனித உரிமை ஆணையத்துக்கு அளிக்கப்பட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. போலீஸ் அதிகாரத்தை கையில் எடுத்து பொதுமக்களை தாக்குவதாக மாநிலம் முழுவதும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீதான புகார்கள் வந்ததை அடுத்து பல மாவட்டங்களில் தடை செய்யப்பட்டது.  இந்நிலையில் இன்று ஃபிரண்டஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு மாநிலம் முழுவதும் இருந்த அனுமதியை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory