» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொலை வழக்கில் கைதான எஸ்ஐ உட்பட 2பேர் மருத்துவமனையில் அனுமதி : 3 பேர் மதுரை சிறைக்கு மாற்றம்

வியாழன் 9, ஜூலை 2020 8:48:02 AM (IST)தந்தை-மகன் சித்ரவதை மரண வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவலர்களால் சித்தரவதை செய்யப்பட்ட நிலையில் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் இருவர் என ஏற்கனவே 5 பேர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சாத்தான்குளம்காவல் நிலையத்தில் பணியாற்றிய 14 பேரையும் தூத்துக்குடி சிபிசிஐடி காவல் நிலையம் அழைத்து வந்து நேற்று காலை முதல் 15 மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர் முடிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமதுரை, வெயில் முத்து, பிரான்சிஸ் தாமஸ் என 5பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தநிலையில் அவர்கள் மீது கொலை குற்றம் சாட்சியத்தை மறைத்தது கொடும் செயல் புரிய உதவி செய்தது உள்ளிட்ட 4பிரிவுகளின்  (Sec 302, 201,342 r/w 107 IPC) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அவர்களை சிபிசிஐடி காவல் நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அழைத்துச் சென்று அவர்களுக்கு உடற் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது காவல் உதவி ஆய்வாளர் பால் துரை அதிகாரிகளையும் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசினார். தான் குற்றம் செய்யவில்லை எனவும், மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை சமாதானப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதனிடையே சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொன்னதால் அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மீதமுள்ள 3 பேர்களும் தூத்துக்குடி குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர் அவர்களை 15 நாள் (23-07-2020) காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் இதனையடுத்து அவர்கள் 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை 2 மணி அளவில் பேரூரணி மாவட்ட சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2.15 மணியளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா மருத்துவமனையில் நேரில் சென்று விசாரணை செய்தார். அதன் பிறகு அங்கிருந்தே இருவரையும் வரும் 23-07-2020 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே கைது செய்யபட்ட காவல்துறையினர் இன்று காலை பேரூரணி சிறையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory