» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு முழு ஊரடங்கு அமல்!!

சனி 11, ஜூலை 2020 5:49:58 PM (IST)

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கபிடிக்கப்படுகிறது.

அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், கரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. தற்போது 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, முதல் ஞாயிறான கடந்த 5ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இம்மாதத்தின் இரண்டாவது ஞாயிறான நாளை (12-ம் தேதி) மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளான பால் கடைகள், மருந்தகங்கள் மட்டுமே நாளை இயங்கும். காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும். இதேபோல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டல்கள், டீக்கடைகள் செயல்படாது. பெட்ரோல் பங்குகளும் செயல்படாது. அத்தியாவசியப் சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக மிகச் சொற்பமான பெட்ரோல் பங்குகள் செயல்படும். மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் நாளை வழக்கம்போல செயல்படும். தமிழகத்தில், நாளை  (12-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடை பிடிக்கப்படுகிறது. இதனால் மளிகை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக  கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory