» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தை வீடியோ பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள்

ஞாயிறு 12, ஜூலை 2020 7:17:44 PM (IST)சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை தொடர்பாக காவல் நிலையத்திற்கும் உறவினர்கள் வந்து நின்ற தூரம் ஆகியவை கணக்கிடப்பட்டு சிபிஐ அதிகாரிகள் வீடியோ பதிவு செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் படுகொலை தொடர்பாக சிபிசிஐடி வசம் இருந்து வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று சாத்தான்குளத்தில் உள்ள தந்தை மகன் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் வீட்டில் உள்ள உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சாத்தான்குளம் மருத்துவமனை, ஸ்கேன் அறை, மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் 6 பேர் கொண்ட குழு இன்று சாத்தான்குளம் காவல்  நிலையத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடந்த அன்று ஜெயராஜ், பென்னிக்ஸ் உறவினர்கள் மற்றும் வியாபாரிகள் காவல் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தபோது உள்ளே இருவரும் தாக்கப்பட்டதாக புகார் அளித்திருந்தனர். சிபிஐ அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நின்ற இடத்திற்கும் காவல்நிலையத்திற்கு உள்ள தூரம் ஆகியவை கணக்கிடப்பட்டு வீடியோ பதிவையும் எடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory