» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் கரோனா தொற்றிலிருந்து 70 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

ஞாயிறு 12, ஜூலை 2020 7:43:16 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 70பேர் சிகிச்சைபெற்று வீடு திரும்பினர். புதியதாக 199பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 70 பேர் இன்று மாலை குணமடைந்து வீடு திரும்பினர். இன்று ஒரே நாளில் 199பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 288பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 2261 பேர் பாதிப்படைந்துள்ளனர். கரோனா வைரஸ் பிரிவில்  சிகிச்சை பலனின்றி 16பேர் உயிரிழந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory