» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அனுமதி: எம்பவர் கோரிக்கை

ஞாயிறு 12, ஜூலை 2020 8:01:55 PM (IST)

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு சேர்க்க தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை உடனடியாக  வெளியிட வேண்டும் என  எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருவது மிகவும் கவலை அளிக்கிறது. 11.07.2020 அன்றைய புள்ளி விவரப்படி 1096 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவாகளை சிகிச்சைக்கு சேர்க்க தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படாத சூழ்நிலை உள்ளது. 

அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதால் மருத்துவம், உணவு வழங்குதல் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை செய்து கொடுப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக தெரிய வருகிறது. ஆகவே இவ்விஷயத்தில் தாங்கள் நேரிடையாக தலையிட்டு கீழ்க்கண்டவற்றை நிறைவேற்ற ஆணையிடுமாறு வேண்டுகிறோம். 

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு சேர்க்க தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை உடனடியாக  வெளியிட வேண்டும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை வெளி மாவட்டங்களில் சிகிச்சைக்கு சேர்க்க விருப்பப்படுபவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்க ஆவன செய்ய வேண்டும். கொரோனா நோய்த் தொற்று தவிர இதய நோய், சர்க்கரை நோய், மகப்பேறு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் பார்ப்பதற்கு உரிய வசதிகளை தனியார் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செய்வதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory