» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் எப்போது? தேர்தல் அதிகாரி

திங்கள் 13, ஜூலை 2020 4:41:16 PM (IST)

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு கூறி உள்ளார்.

குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ காத்தவராயன், திருவெற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி ஆகியோர் மறைவைத் தொடர்ந்து, இரண்டு தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் மார்ச் 1ஆம் தேதி அறிவித்தது. எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் மறைந்ததையடுத்து, அவருடைய  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியும்  காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-வாக்குப்பதிவு இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு தயார் செய்வது தொடர்பாக கடந்த வாரம் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது  தேர்தல் ஆணைய விதிப்படி வாக்குப்பதிவு  இயந்திரங்கள் முதற்கட்ட சோதனைகளை முடித்து தயார் நிலையில் இருப்பதாக கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory