» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஐந்து போலீசாரை நாளை ஆஜர்படுத்த வேண்டும் : சாத்தான்குளம் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

திங்கள் 13, ஜூலை 2020 5:39:08 PM (IST)

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான 5 போலீசாரை நாளை காலை  11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக சிபிஐடி போலீசார் இரட்டைக் கொலை வழக்குப் பதிந்து, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாரை கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி சிபிஐ சார்பில் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 5 பேரையும் நாளை காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory