» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் ஒரே நாளில் 269 பேர் கரோனா தொற்றில் பாதிப்பு : 39 பேர் டிஸ்சார்ஜ்!

புதன் 15, ஜூலை 2020 8:12:09 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வார்டில்  269 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வார்டிலிருந்து இன்று 39 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

தூத்துக்குடியில் தற்போது கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்., உள்ளூரிலேயே சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களால் கரோனா தொற்று அதிகம் பரவுவதாக தெரிய வந்துள்ளது. ஒரு புறம் கரோனா பாதிப்பு இருந்தாலும் மறுபுறம் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வார்டில்  269 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கரோனா வார்டிலிருந்து இன்று 39 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினார்கள். தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் 402 பேர் பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று  தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றின் காரணமாக இறப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

Mr.AK...Jul 15, 2020 - 09:36:17 PM | Posted IP 108.1*****

இன்று 2 பேரும் மொத்தமாக 19 பேரும் இறந்துள்ளதாக covid19india.org இல் குறிப்பிட பட்டுள்ளது . இந்த இரண்டில் எது தவரான பதிப்பு ???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory