» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தலில் ஆட்சியை பிடிக்க தந்திரம் செய்யும் திமுக : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

வியாழன் 16, ஜூலை 2020 6:18:36 PM (IST)

தமிழகத்தில் கடந்த 1967 ல் திமுக ஆட்சியை பிடிக்க எப்படி மத மோதலை உருவக்கினார்களோ அதே போன்று வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்க மீண்டும் திமுக அதே தந்திரத்தை செய்து வருவதாக நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  கூறினார்.

யு.டியூப் சேனலில் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி பாஜக சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவு பேருந்து நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இனை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக எப்போது எல்லாம் பலவீனபடுகிறதோ ? அப்போது எல்லாம் இந்து மத கடவுள்களை கொச்சை படுத்தி பேசி மக்கள் வாக்குகளை பெற நினைப்பது வழக்கம்.

அந்தவகையில் தமிழகத்தில் 1967 ம் ஆண்டு திமுக ஆட்சியை பிடிக்க எப்படி மத மோதலை உருவக்கினார்களோ அதே போன்று வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்க மீண்டும் திமுக அதே தந்திரத்தை செய்து வருகின்றனர். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்


மக்கள் கருத்து

நான் தமிழன்Jul 16, 2020 - 09:13:36 PM | Posted IP 162.1*****

திருட்டு திமுக ஒரு கூ முட்டை, பொய்யர் ஒரு புளுகு மூட்டை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory