» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விராட் கோலி, தமன்னாவைக் கைது செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

வெள்ளி 31, ஜூலை 2020 3:21:11 PM (IST)

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்துள்ள விராட் கோலி, தமன்னா ஆகியோரைக் கைது செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இணைய சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களில் நடித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, நடிகை தமன்னா போன்றோரைக் கைது செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory