» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மேலும் 5,879 பேருக்கு கரோனா தொற்று : பாதிப்பு 251738 ஆக உயர்வு

சனி 1, ஆகஸ்ட் 2020 6:46:47 PM (IST)

தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) மேலும் புதிதாக 5879 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய மாநில சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,879 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,074 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் 368 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் 99 பேர் (அரசு மருத்துவமனை -77, தனியார் மருத்துவமனை -22) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 4,034 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம் இன்று ஒரேநாளில் 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,90,966 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தமிழகத்தில் 56,738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory