» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு : கடைகள் மூடல் - சாலைகள் வெறிச்சோடியது

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2020 10:21:44 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வில்லா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் (ஜூலை) ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதமும் (ஆகஸ்டு) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. 

இதையொட்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.  மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளது. பால், மருந்து கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  தினசரி சந்தைகள், மீன் மார்கெட், கறி கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் ஊரடங்கை முன்னிட்டு காவல் துறையினர் மக்களிடம் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory