» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊரடங்கில் ஊர் சுற்றிய மக்களுக்கு பாடம் எடுத்த தூத்துக்குடி எஸ்பி. ஜெயக்குமார்

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2020 11:23:51 AM (IST)


தூத்துக்குடி நகரில் ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் பாடம் நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கின் போது வெளியே சுற்றிய சுமார் 50 பேரை பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர்.

ஆய்வுக்காக அங்கு வந்த மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களிடம் கரோனா பரவாமல் தடுக்க ஞாயிறு அன்று  தளர்வில்லாத  முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இவ்வாறு நீங்கள் வெளியே சுற்றினால் நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது. பிற நாட்களில் நீங்கள் எப்படி இருந்தாலும், ஞாயிறு அன்று வெளியே வராமல் வீட்டிலிருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க்குகளையும் மாவட்ட எஸ்பி வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு கடைகளை அடைக்கும் நேரம் குறித்து ஆட்சியருடன் கலந்து பேசி இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும் . ஊரடங்கை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பறிமுதல் செய்யப்பட்ட 3212 வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இன்னும் 190 வாகனங்கள் மட்டுமே ஒப்படைக்க வேண்டியுள்ளது என்றார்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மீது தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருவது குறித்து கேட்ட போது, இதுவரை அவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் புகார்கள் அளிக்கப்பட்டால் அது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு எஸ்பி.,ஜெயக்குமார் தெரிவித்தார்.  ஆய்வின் போது தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி., கணேஷ், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து  உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், உதவி ஆய்வாளர் காமராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ‌பாண்டியன், பி.ஆர்.ஓ. சத்தியநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory